சூப்பர் என்று சுட்டிக்காட்டினாய்!

டிஸ்கி:- @லேபிள்

உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே

டெய்லி உன் முன் நின்று
கண் விழித்த நாட்கள் தான்
இத்தனை ஆண்டுகளாய்
தரித்திரமாய் இருக்கிறது

பார்வையாலே சில நிமிடம்
தலை சீவிக்கொண்டே சில நிமிடம்
பவுடர் போட்டப்படியே சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
முகத்தில் பேர்& லவ்லி அப்பிய
அழகோடு சில நிமிடம்

எது கருப்பு எது கலர்
எனக்கு எதுவுமே தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி ஐ டோண்ட் கேர்

எப்பொழுது நின்றேன் எப்பொழுது சென்றேன்
ஒரு நாளும் புலப்படவில்லை
எப்பொழுதுமே நின்றேன்
இதுவரைக்கும் முடியவில்லை

தலை சீவினேன்
அழகு என்று ஜொள்ளினாய்
ஆடை அணிந்தேன்
சூப்பர் என்று சுட்டிக்காட்டினாய்

கண்ட கண்ட திருக்கோலம்
கண்டிப்பாக காண்பித்தாலும்
கடைசியிலே காணபித்த அழகு
கண்ணில் இன்னும் நிக்கிது!நிக்கிது

உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே


டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

(என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது)

49 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//எப்பொழுது நின்றேன் எப்பொழுது சென்றேன்
ஒரு நாளும் புலப்படவில்லை
எப்பொழுதுமே நின்றேன்
இதுவரைக்கும் முடியவில்லை//

இப்படி கொடுமைப்படுத்தினா கண்ணாடி உடையாம என்ன செய்யும. :-)))).

said...

Me the firsta boss???

said...

kavuja boss kavuja !!!!

Oru kosuva saagadikka mudiyalanu aadhavan buzzla kavuja potta neenga kannadiya odachiputtu (konnuputtu) eppadi odachennu kavuja podareengalae !!!! avvvvvvvvvvvvvvvvvvvvvvv

said...

//(என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது)//

adhaanae.. seekiram andhu aayilsa gumma aarambingappa :D

said...

இது (கண்ணாடி-முன்) நவீனம்

யாரு பின் நவீனம் எழுதுறா

Anonymous said...

//தலை சீவினேன்//

இந்த மேக் அப் எல்லாம் போட்டுத்தானே இந்த போட்டோ எடுத்தது. அது தாங்க முடியாமத்தான் கண்ணாடியே உடைஞ்சி போச்சு :)

http://kusumbuonly.blogspot.com/2010/01/blog-post_05.html

said...

முகத்தில் பேர்& லவ்லி அப்பிய
அழகோடு சில நிமிடம்
]]

இப்ப நம்புறேங்க இது உங்க வரலாறே தான்

said...

சூப்பர் என்று காட்டப்பட்ட சுட்டியெங்கே?

said...

ஹைய்யா ஆயில் போஸ்ட் போட்டு இருக்காரேய்... ;-)))

said...

\\\பவுடர் போட்டப்படியே சில நிமிடம்\
பாஸ் மிஸ்டெக் இருக்கு... பவுடர் போட்டபடி பல மணி நேரம் என்று இருக்கனுமே.. ஹிஹிஹி

said...

\\\
எப்பொழுது நின்றேன் எப்பொழுது சென்றேன்
ஒரு நாளும் புலப்படவில்லை\\\

பாஸ் மேனேஜர் கூப்பிடுறாராம்... போய் வேலை என்னன்னு கேளுங்க.. ;-))

said...

\\\
டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

(என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது)\\\


பாஸ் எங்க வீட்டுக் கண்ணாடி இதுவரை உடைஞ்சதே இல்ல... அப்ப நான் ரொம்ப அழகா இருக்கேனோ?... ;-))

said...

Nice

said...

ஏன் ?
ஏன்?

said...

இத்தனை கொடுமைக்கும் அந்த கண்ணாடி இவ்வளவு நாள் உழைச்சதே பெரிய விசயம் அந்த கண்ணாடிக்கு தியாகின்னு பேர் வைங்க :)

said...

//உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே//

இந்த உலகத்துலயே பாவமானது கண்ணாடிதாங்க....எவ்ளோ சோகத்த தாங்குது....

said...

அது ஏன் உங்களுக்கும் ஆதவன் மாதிரியே கண்ணாடி ஒடஞ்சிடுச்சு?

said...

ஒய் பாஸ் ஒய்?

கண்ணாடி இப்பெல்லாம் நிறைய பேருக்கு உடையுது பாஸ். ஹி ஹி

said...

மவனே

அவனைக் கண்டேன்னா கண்ட துண்டமா உடைச்சுடுவேன்,
உங்களை இல்ல பாஸ், கண்ணாடியைச் சொன்னேன்

said...

ஆதவன், ஆயில்யன் - வரிசையா கண்ணாடி உடையும் மர்மமென்ன,

வீட்டுல பொண்ணு பார்க்கறாங்கனனு நியூஸ் கிடைச்ச உடனே வகை தொகையில்லாம கண்ணாடி முன்னாடி நின்னா, பாவம் அதும் தான் என்ன பண்ணும். :)

said...

பார்வையாலே சில நிமிடம்
தலை சீவிக்கொண்டே சில நிமிடம்
பவுடர் போட்டப்படியே சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
முகத்தில் பேர்& லவ்லி அப்பிய
அழகோடு சில நிமிடம்

(என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது)


இப்படி கவிதை வடித்தால்
கண்ணாடி உடையாம என்ன செய்யும
பாஸ் !!!!!!!

said...

டமால்..? விடுங்க அதுக்குப் பொறாமை:)!

said...

nalla iruku kavithai:)

said...

/*என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது*/
கண்ணாடி உடைஞ்சா தான் பாஸ் வேடிக்கை

said...

:-))

said...

சூப்பர் கவுஜ...

:-)

said...

மழைசாரலில் சில்லி சாப்பிட்டா மாதிரி....

said...

:-)

said...

//டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

(என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது//

எனக்கு இந்த வரிகள்தான் ரொம்பப் புடிச்சது

said...

டமால்..? விடுங்க அதுக்குப் பொறாமை//

அதேதான் பாஸ் :))

said...

vidunga boss..vera kannadi kedaikamaya pogum..adutha kavitha eluthalam..

said...

கொல வெறி கண்ணாடியக் கூட விட்டு வெக்கலியா? :)

said...

kavithai kavithai.... :)

said...

கவிதைய விட்டுட்டு எழுதியவரை பிடிச்சுகிட்டாங்க...
விடுங்க பாஸ்...

கவித நல்லாவே இருக்கு.

said...

பாஸ்..ஒருவேளை உங்க கவிதைக்கு அது கிளாப் பண்றதா நினைச்சு....


கண்ணாடி முன்னாடி யோசிப்போர்
சங்கம்!

said...

பாஸ்..கண்ணாடி முன்னாடி கவிதை சொன்னீங்களா பாஸ்! அதான்...:-))

said...

/இத்தனை ஆண்டுகளாய்
தரித்திரமாய் இருக்கிறது/

அவ்வ்வ்வ்..கண்ணாடிக்கு எப்படி இருந்ததோ?! கண்ணாடியே..ஒரு கவிதை ப்லீஸ்...அட்லீஸ்ட் ஒரு உடைஞ்ச கவிதை...ப்லீஸ்! :))

said...

/பவுடர் போட்டப்படியே சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
முகத்தில் பேர்& லவ்லி அப்பிய
அழகோடு சில நிமிடம்/

கற்பனையே டெரராவுல்லே இருக்கு....:))) அந்த ஃபோட்டோ கிடைக்குமா பாஸ்!
பப்பு சாப்பிட ஒரே அடம்!

said...

பாவம் கண்ணாடி!

said...

40 வது...அண்ணே வர வர கலக்குறிங்க ;))

said...

//டெய்லி உன் முன் நின்று
கண் விழித்த நாட்கள் தான்
இத்தனை ஆண்டுகளாய்
தரித்திரமாய் இருக்கிறது//

செல்லாது... செல்லாது...
கடைசி வரி செல்லாது.

இத்தனை ஆண்டுகள்
சரித்திரமாய் இருக்கிறது-ன்னு சொல்லுங்க.

அதான் உண்மை தெரிஞ்சி போச்சில்ல... கேப்ஸன மாத்துங்க.

// கடகம் - எல்லா இடங்களிலும் ராசியாய் இருத்தல்//

ஆயில்யன் - ஆயுள் முழுவதும் கண்ணாடியை உடைத்தல்

said...

//உன் முன்னே நான் நினற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே//

சூப்பர்!!

said...

நல்லா இருந்தது... நான் கவிதையைச்
சொல்லல, கண்ணாடியச் சொன்னேன்.

said...

வைரமுத்துவுக்கு மெயில் அனுப்புங்க
:)

ஆனால் அரவிந்த்சாமி வாய்ஸ்ல கூட கற்பனை பண்ண முடியாது பாஸ்

:)

என்னமோ அந்தக் இருவர் கவிதைய கேட்க வச்சுட்டீங்க மறுபடி நன்றி!!!

said...

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

மீண்டும் வருவான் பனித்துளி

said...

கலக்கல் நண்பரே !

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

said...

எத்தனை கண்ணாடி உடைந்தாலும்
பேர் & லவ்லி முயற்சி தொடரட்டும் நண்பா.

said...

:))

said...

செம காமடிங்க..சூப்பர் ஆயில்யன்.