உலா வரும் ஒளிக்கதிர்...!

தூர்தர்ஷனில் சில காலத்திற்கு முன்பு பார்த்த நிகழ்ச்சி உலா வரும் ஒளிக்கதிர் (இப்பவும் வருதா? என்னான்னு அப்டேட் பண்ற அளவுக்கு விசயம் தெரியல..!)

ஒவ்வொரு ஊரிலும் மிகப்பழமையான திருக்கோவில்கள் பற்றியும் சிறப்பு செய்திகளோடு வர்ணனைகளோடு காட்சிகளாய் தருவித்து நிறைய யாராலும் கவனிக்கப்படாத அல்லது பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் பற்றி அறிந்துக்கொள்ள ஏதுவாக அமைந்த நிகழ்ச்சி!

அதுவும் சொந்த ஊரோ அல்லது தெரிந்த அக்கம்பக்கத்து ஊரோ வந்தால் மனம் குஷியாகிவிடும்.

நாம போன தடவை அங்க போனோம்ல்லம்மாவில் தொடங்கி புளிசாதம் தின்று அக்காரவடிசலை வழித்து, கட்டி கை கழுவிய இடம் வரைக்கும் நினைவுகளிலிருந்து கிழற்றி/சுழற்றி/கழற்றி வீசும் சம்பவங்களும் நடக்கும் நேரமும் கூட...!

இதன் தொடர்பில் நினைவுகளை கிளறிவிட்டுக்கொண்டிருக்கிறது சமீபத்திய விடுமுறைப்பயண புகைப்படங்கள் :(

பெங்களூரில் அண்ணன் ஜீவ்ஸ் ஆசியோடு பெற்றுக்கொண்ட கேமராவும் முதல்வாழ்த்தாய் ராமலெஷ்மி அக்காவின்“இனி கலக்குங்க” வை செல்போன் வழியே பெற்று மகிழ்ந்த தருணத்தில் தொடங்கி இப்பொழுது வரை கையில் கேமராவினை வைத்து துழாவிக்கொண்டுதான் இருக்கிறேன்!

ஆனாலும்,ஆசையாய் எடுத்த புகைப்படங்கள் பலவற்றை பார்க்க இயலா டெக்னிகல் பிராபளங்களில், சிலவற்றை பார்த்து ’ஆ’வென வாய்பிளந்த தருணங்களும் உண்டு! (சிவிஆர் கையாலயே என் காமிராவில என்னிய போட்டோ புடிச்சு வாங்கிட்டோம்ல! - தாங்க்ஸ் டூ ஜி3)

குறிப்பாய் ஒரு சம்பவத்தை இங்க ஜொள்ளிய ஆகணும்! பிப்ரவரி மாத ஆக்‌ஷன் போட்டியில் முத்தக்காவின் படத்தினை பார்த்து நானும் பருந்தாக முயற்சிக்க நினைத்தப்போது கண்ணில் பட்ட போஸ்டர் “மாயூரம் நாட்டியாஞ்சலி” ரைட்டு ஒரு முடிவோடு கையில் கேமரா பேக் பக்காவாக செட்டிலாக நினைத்து மேடைக்கு லெப்ட் சைடு வாங்கி நின்னுக்கிட்டு பிளாஷ் ஆரம்பித்தேன்! நிறைய படங்கள் சூப்பரூடா எப்படிடா தம்பி நீ இப்படி ஃபீல் பண்ணுற ரேஞ்சுக்கு என்னையே நான் புகழ்ந்துக்கொண்டே படங்களாய் எடுத்து தள்ளினேன்! (ஆனால் அனைத்து போட்டோக்களுமே இப்பொழுது எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்கில் ஆனாலும் திறக்க இயலாத தரித்திர நிலையில்...)

இப்படி ஃபீல் பண்ணிக்கிட்டு போட்டோ புடிச்சிக்கிட்டிருக்கும்போது அங்கே இருந்த போட்டோகிராபர்களில் ஒருவர் அருகில் வந்து என்னாம்மா ஃபீல் பண்றீயேப்பா நீ எந்த ஸ்டுடியோன்னு கேக்க..? அட..! நான் சும்மா ஹாபிக்குத்தாங்க (டேய்.... இதெல்லாம் கொஞ்சம் ஓவருதாண்டா!) என்று கூறும்போதே அந்த லென்ஸினை அப்பொழுதுதான் புதிதாய் பார்த்திருப்பார் போல அருமையா இருக்குப்பா போய் செண்டர்ல முன்னாடி நின்னு எடுப்பான்னு சொன்னப்போது...!

மனதிற்குள் ஜீவ்ஸ் சிரித்தப்படியே...!

நான் வானில் லைட்டா பறந்தேன்!

சரி அதற்கு பிறகு முன்னாடி போய் நின்னு இன்னும் நிறைய போட்டோஸ் எடுத்தீங்களான்னு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது!

போங்க...! எனக்கு வெக்கம் வெக்கமா வந்துருச்சு!

@@@@@@@@@@@@

இதுதாங்க நான் பிடிச்ச படங்கள் பார்க்க கொஞ்சமாய்....!
(அடப்பாவி..! கிளிப்பிள்ளைக்கு சொல்லி தர்ற மாதிரி லைட்டிங்க்,அப்ரச்சர்,ஃபோகல் லெங்க்த் எல்லாம் சொல்லிக்கொடுத்தேனே கடைசியில கவுத்துப்புட்டானேன்னு மனம் வெதும்பும் ஜீவ்ஸ் அண்ணாச்சி என்னை மன்னிப்பாரக....!)

படம் பெர்சா தெர்லங்காட்டி...!

42 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

SUPERB!!!

said...

அண்ணே 2வது படம் தான் முதல் பரிசு...சூப்பர் ;))

அப்புறம் குழந்தை...நன்றாக வந்திருக்கு அந்த படம் சைடுல அழகாக நிக்குது செல்லம் ;))

3வது இலைக்கு ;))இதுல உள்குத்து ஏதாச்சும் இருக்கான்னு எல்லாம் கேட்க கூடாது ;)

said...

உண்மையில் கலக்குறிங்கண்ணே...உங்களுக்கு உள்ள ஒரு சிங்கம் இருக்கு..அதை அடிக்கடி வெளியில விடுங்க ;)))

said...

படங்கள் எல்லாம் கலக்கல்! ஆனா முழுசா தெரியலியே??

said...

ஃபீல் செய்யனுமப்பா.. நானெல்லாம் ஓசிக்கேமிராவோ சாதாக்கேமிராவோ வச்சிக்கிட்டே பல சமயம் கேமிராக்காரங்கமாதிரியே பந்தாவா சுத்திட்டிருப்பேன்..
அந்த மினார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கோபுரமும் நல்லா வந்திருக்கும்.. ஆனா கலர் எனக்கு என்னவோ போல இருக்கு...

said...

/// கோபிநாத் said...

உண்மையில் கலக்குறிங்கண்ணே...உங்களுக்கு உள்ள ஒரு சிங்கம் இருக்கு..அதை அடிக்கடி வெளியில விடுங்க ;)))//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

முத்துலக்ஷ்மி அக்காவோட படத்தைப் பார்த்து மெர்சலாகிப் போய்ட்டேன்.உண்மையிலேயெ கலக்கல்!

said...

ஹேய்.. போட்டோஸ்லாம் செம்ம சூப்பர் :-)

said...

//தமிழ் பிரியன் said...

/// கோபிநாத் said...

உண்மையில் கலக்குறிங்கண்ணே...உங்களுக்கு உள்ள ஒரு சிங்கம் இருக்கு..அதை அடிக்கடி வெளியில விடுங்க ;)))//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே
//

டபுள் ரிப்பீட்டேய்ய்

said...

ஆயில்ஸ் அண்ணா..சூப்பர்! புளியம்பழமும், சருகும்..அதுவும் சருகை என்ன கோணத்துல எடுத்துருக்கீங்க! கலக்கறீங்க! பாப்பா அட்டகாசம்!

said...

நியூட்டன் அளவுக்கும் போயிட்டீங்க ஆயில்ஸ் அண்ணா...
நியூட்டன் பார்த்த ஆப்பிள்..
ஆயில்ஸ் கையில் முறுக்கு...
(எங்க கையில் இதெல்லாம் கிடைச்சிருந்தா யோசிக்காம சாப்பிடுடுவோம்..)

said...

ஏதாவது ரச்கசியம் மினார்க்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருக்கா..சின்ன பாண்டி?? :-)

said...

முருக்கும்

குட்டீஸும் தூள்

said...

படிக்கல பட் படமெல்லாம் சூப்பர் :))

said...

// சென்ஷி said...
//தமிழ் பிரியன் said...

/// கோபிநாத் said...

உண்மையில் கலக்குறிங்கண்ணே...உங்களுக்கு உள்ள ஒரு சிங்கம் இருக்கு..அதை அடிக்கடி வெளியில விடுங்க ;)))//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே
//

டபுள் ரிப்பீட்டேய்ய்//

அண்ணா போட்ட கமெண்ட்டுக்கு தமிழ் அண்ணா ரிப்பீட்டு போட அதுக்கு சென்ஷி அண்ணா டபுள் ரிப்பீட்டு போட அதுக்கு இந்த அன்பு தங்கச்சியோட ரிப்பீட்டே... (அப்பா ஒருவழியா முடிச்சாச்சு.. :))))

said...

தின்னுறத விடமாட்டீங்களா, போட்டோவில கூட

நான் முறுக்கை சொன்னேன்.

எனக்கு முறுக்கு படமும், அந்த செம்மண் இலை, கடேசியா அந்தக் குட்டிப்பாப்பா படமும்,

நொம்ப்பப் புடிச்சி இருந்தது.

said...

கடைசி படம் கலக்கல்!

சிங்கம் கிளம்பிட்டுடோய்!

said...

பாஸ், உலா வரும் ஒளிக்கதிருக்கு நான் ஈழத்தில் இருந்தபோதே அடிமை, ஞாபகப்படுத்திட்டீங்க

//கோபிநாத் said...
உண்மையில் கலக்குறிங்கண்ணே...உங்களுக்கு உள்ள ஒரு சிங்கம் இருக்கு..அதை அடிக்கடி வெளியில விடுங்க ;)))//

உங்களை மிருகம்னு திட்டுறார் பாஸ்

said...

முதல் படம் வெரி நைஸ். ரெண்டாவதை போட்டு அநியாயத்துக்கும் இப்படி டெம்ப்ட் பண்றீங்களே:))! 3-வதும் அப்படித்தான்:). ம்ம்ம் புளியாம்பழம்..!

பாப்பா அழகு.

மற்றதில் பிற்சேர்க்கையாய் கலரை அதிகப் படுத்தினீர்களோ? ஜீவ்ஸ் வந்து சொல்லட்டும்:)!

said...

ஜூப்பர்.... கலக்குங்க...

said...

முறுக்கு நல்லா இருந்தா சாப்பிடலாம்..இல்லைன்னா இப்படி போட்டோதான் எடுக்கலாம்னு சொல்றீங்களா பாஸ்!

said...

அண்ணே பதிவின் தலைப்பு ஜூப்பர்!

said...

படங்கள் சூப்பரோ சூப்பர்!

said...

கலக்குறீங்க!

said...

வாழ்த்துக்கள் ஆயில்!

said...

ஆனாலும் ஜீவ்ஸ் க்கு இவ்ளோ ஓரவஞ்சனை இருக்க கூடாது...!

said...

கடைசி படம் அட்டகாசமா இருக்கு
(போதும் நிறுத்துங்க சொல்ற மாதிரி இல்ல):)))

said...

பாப்பா அழகு.
புளியம்பழமும் நன்றாய் இருக்கு.

said...

புளியம்பழம் சூப்பர்.

said...

அடடே... பின்றிங்களே ஆயில்ஸ்.. :)

said...

//கோபிநாத் said...
உண்மையில் கலக்குறிங்கண்ணே...உங்களுக்கு உள்ள ஒரு சிங்கம் இருக்கு..அதை அடிக்கடி வெளியில விடுங்க ;)))
//

Repeatae :)))

said...

உங்களுக்குள்ள என்னமோ இருந்திருக்க பாருங்களேன் ;))

படங்கள் எல்லாம் அட்டகாசம் :))

said...

அனைத்து படமும் கலக்கல் அண்ணே:))

said...

அண்ணே அந்த முறுக்கு எனக்கு வேணும்:((

said...

ஆயில்யன்,படங்கள் அத்தனையும் அசத்தல்.வானமும் கோவில் கோபுரமும் தொடுவது அருமை.
மாவிலை அநாதையாய்.கை நீட்டும் குழந்தைச் சிட்டு...
எல்லாமே.பாராட்டுக்கள்.

said...

அனைத்து படமும் கலக்கல் அண்ணே:))

said...

அனைத்து படமும் கலக்கல் அண்ணே:))

said...

I like the last one ;-) Cute na ;-))

said...

கலக்கிட்டீங்க ...

said...

பாஸ். நிறைய இரைச்சல் இருக்கு போட்டோஸ் ல .. கொஞ்சம் ஐ.எஸ்.ஓ குறைச்சு எடுங்கண்ணே

மத்தபடி வேற என்ன சொல்ல.. நீங்க போட்டோ எடுத்திருக்கீங்க.. பட்டைய கிளப்புதுன்னு நான் சொல்ல முடியலைன்னாலும் நல்லா அழகா இருக்கு!

நிஜமா நல்லவரே நான் என்னயா ஓரவஞ்சனை செஞ்சேன்?

said...

ellaa padangalume super…romba thelivaa irukku….

said...

/ Jeeves said...நிஜமா நல்லவரே நான் என்னயா ஓரவஞ்சனை செஞ்சேன்?/


செய்றதும் செஞ்சிட்டு கேள்வி வேற...:))