Phantom HD Gold


டிஸ்கி
:- நாலு பேருக்கு நாலு விசயம் போய் சேரணும்னா இந்த மாதிரி பதிவு போடறதுல தப்பேயில்ல!

எந்தவொரு முக்கியமான அதாவது தமிழ்ல சொல்லணும்ன்னா இம்பார்டெண்ட் டெசிசன்ஸ் எடுக்கறச்ச எல்லாருமே கொஞ்சம் சைலண்ட் கீப் அப் செஞ்சு ஒரு எதிர்பார்ப்பினை உண்டாக்கிதான் செய்வாங்க! அதாங்க ஸ்லோமோஷன். சினிமாவுலே நாம கத்துக்கிட்டோமா அல்லது நம்மகிட்டர்ந்து சினிமா சுட்டுக்கிச்சான்னு தெரியாது - இந்த ஸ்லோ மோஷன் எஃபெக்ட்க்கு அடிமையாகதா ஹீரோக்களே கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு ஒவ்வொரு கோணத்திலயும் ஸ்லோமோஷன்ல நடிச்சு தீர்த்துட்டாங்க!

இப்படிப்பட்ட ஸ்லோ மோஷன் நடிகர்களுக்காக புது புது தொழில் நுட்பத்துடன் அதிகமான ஹை டெபனஷன் (HD) டிஜிட்டல் கேமராக்கள் மார்கெட்டில் க்யூ கட்டி நிற்க தொடங்கிவிட்டது அதுவும் தற்போதைய லேட்டஸ்ட் phantom HD Gold Camera - High Speed இதுல என்ன அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி



சாதாரணமாக ஸ்லோமோஷன் காட்சிகள் நிமிடத்திற்கு 24 ப்ரேம்ஸ் சுட்டுத்தள்ளும் கேமரா வகைகளிலிருந்து தரப்படுகின்றன ஆனால் இந்த புதிய phantom HD Gold நிமிடத்திற்கு 1500 ப்ரேம்ங்களை சுட்டு தள்ளும் அதே நேரத்தில் படத்தில் கிளாரிட்டிக்கும் 100% உத்தரவாதம் !

சாம்பிள்


தமிழ் திரைப்பட உலகை பொறுத்த வரையில் அனேகமாக எந்திரனிலும் மற்றும் இயக்குனர் அருண்வைத்யநாதனின் எதிர்மறையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு!

இனி வருங்காலங்களில் இந்த உயர்தர தொழில்நுட்ப கேமராக்களை வைச்சு பாடா படுத்தி எடுக்க தமிழ் திரையுலகம் ரெடியா நிக்கிது !
இனி குளோஷப் - ஷாட்ல ஹீரோவோட கண்ணுல இருக்கிற நரம்புகளில் ரத்தம் கொப்புளிக்கிறதுலேர்ந்து கண் இமைகள் துடிப்பது உதடுகள் துடிப்பது வரைக்கும் கண்டிப்பா காட்ட டிரை பண்ணுவாங்க!

யெப்பாடியோவ்வ் நினைச்சு பார்த்தாலே டெரர் காமிக்கிது!

சிட்டுக்குருவிகள்


நமது வாழ்வுமுறை, கட்டட அமைப்புகளின் மாறுதலால் நம்மைச் சார்ந்து நம் வீடுகளில் நம்முடன் வாழ்ந்து வந்த சிட்டுக் குருவி இனங்கள் காணாமல் போய்விட்டன.

சங்க காலம் முதல் பாரதியார் பாடல்கள் வரை போற்றிப் புகழ்ந்த சிட்டுக் குருவிகள், இன்று நம்மைவிட்டு எட்டாத இடத்துக்குப் போய்விட்டன.

சிறுவயதில் மூத்த குடிமக்கள் வாழ்ந்த பழைய வீடுகளின் மூலை முடுக்கு சுவரின் பொந்துகளில் கூடுகட்டி கீச்...கீச்... என்று சத்தமிட்டபடி அங்கும் இங்கும் வீட்டுக்குள்ளேயே பறந்து செல்லும் சிறிய குருவிகள் இன்று எங்கே போய்விட்டன?

சுற்றுச்சூழல் மாறுதல்களால் நம் எதிர்கா லச் சந்ததியினருக்கு பல இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் சிட்டுக் குருவி இனமும் ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வில்லாமல் பல விஷயங்களால் நாம் கண்டுகொள்ளாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் நமது கட்டட அமைப்புதான். வீடுகளில் உத்தரங்கள், காற்று துவாரங்கள், ஓட்டு வீடுகளில் ஓடுகளுக்கிடையே உள்ள சந்துகள் சிட்டுக் குருவிகளின் வாழ்விடமாக இருந்தன.

தானியங்களைப் புடைக்கப் பயன்படுத்திய முறங்களில் இருந்து விழும் குறுநொய், வீட்டு முற்றங்களில் பாத்திரங்களைக் கழுவும் போது அவற்றில் எஞ்சியிருக்கும் சோற்றுப் பருக்கைகளைச் சாப்பிட்டு குருவிகள் உயிர் வாழ்ந்து வந்தன.

உடலுக்கு வலிமை தரும் அந்த தானியங்களைச் சாப்பிடுவது குறைந்து பீசா, பர்கர், ஃபாஸ்ட் புட் கலாசாரத்துக்கு நாம் மாறிவிட்டோம்.

கல், குறுநொய் நீக்கப்பட்ட கம்ப்யூட்டர் அரிசி, கோதுமை என்றாகிவிட்டது. வீட்டுச் சமையல் அறைகளில் இருந்து சோற்றுப் பருக்கைகள் "சிங்க்' மூலம் நேராக பாதாள சாக்கடைக்குப் போய்விடுவதால் சிட்டுக் குருவிகளுக்கு உணவு என்பதே கனவாகிவிட் டது.

உணவு, வாழ்விடம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் நகரப் பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு இவை குடிபெயர்ந்து விட்டன. சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய இக்குருவிகள் ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கப்படும். ஆண்டு முழுவதும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். 3 முதல் 5 முட்டைகள் வரை இடும்.

சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்டத் தெரியாது. வீடுகளில் உள்ள சந்து, பொந்துகளில் அருகம்புல், வைக்கோல், குப்பைகளில் உள்ள நார்க்கழிவுகள், பஞ்சு போன்றவற்றை திணித்து அவற்றில் முட்டையிடும். 27 நாட்களில் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியேவரும். முருங்கை, கருவேலமரம், அவரைக் கொடி, பூசணிக்கொடியில் உள்ள புழுக்கள் மட்டுமே சிறிய குஞ்சுகளுக்கு உணவு. புழுக்கள் உருவாகும் செடிகள் நகரத்தில் இல்லாமல் போய்விட்டன.

சிறிய பொந்துகளில் தங்கும் இந்தக் குருவிகளுக்கு குஞ்சுகள் பொறித்தவுடன் போதிய இடவசதி இருக்காது என்பதற்காக குஞ்சு களை கூட்டில் தனியாக விட்டுவிட்டு ஆண், பெண் குருவி மட்டும் வீட்டுக்கு அருகில் உள்ள குட்டையான மரங்களில் அமர்ந்து இரவுப் பொழுதைக் கழிக்கும்.

நன்றி - தினமணி

நன்றி - தினமலரில் இன்று 20.03.2010 வெளியான செய்தி

சிட்டுகுருவிகள் விஷயத்தில் நம் நடவடிக்கைகள் எல்லாமுமே மாறி விட்டன! தெருக்களில் விளையாட்டின் போது அல்லது விளையாட்டே சிட்டுகுருவி காண்பது என்றிருந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன! நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தீமைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது! தெரிந்த விஷயங்களாய் இது போன்ற சிட்டுகுருவிகளின் மறைவுகள் இருக்கும்போது தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றனவோ....???

சூப்பர் என்று சுட்டிக்காட்டினாய்!

டிஸ்கி:- @லேபிள்

உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே

டெய்லி உன் முன் நின்று
கண் விழித்த நாட்கள் தான்
இத்தனை ஆண்டுகளாய்
தரித்திரமாய் இருக்கிறது

பார்வையாலே சில நிமிடம்
தலை சீவிக்கொண்டே சில நிமிடம்
பவுடர் போட்டப்படியே சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
முகத்தில் பேர்& லவ்லி அப்பிய
அழகோடு சில நிமிடம்

எது கருப்பு எது கலர்
எனக்கு எதுவுமே தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி ஐ டோண்ட் கேர்

எப்பொழுது நின்றேன் எப்பொழுது சென்றேன்
ஒரு நாளும் புலப்படவில்லை
எப்பொழுதுமே நின்றேன்
இதுவரைக்கும் முடியவில்லை

தலை சீவினேன்
அழகு என்று ஜொள்ளினாய்
ஆடை அணிந்தேன்
சூப்பர் என்று சுட்டிக்காட்டினாய்

கண்ட கண்ட திருக்கோலம்
கண்டிப்பாக காண்பித்தாலும்
கடைசியிலே காணபித்த அழகு
கண்ணில் இன்னும் நிக்கிது!நிக்கிது

உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே


டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

(என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது)