ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!
பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு பொங்கல் வரும் நாளையும் விடுமுறை வரப்போகும் வேளையையும் குறிப்பில் உணர்த்தும் மண் பானைகளின் வருகை!
எங்கும் பரந்த விற்பனை மையங்களாக அன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வந்து இறக்கும் மண் பானைகளை கிட்டதட்ட 15 நாட்களுக்கு,பானைகளை பத்திரமாக பாதுகாத்து,பனியிலேயே பானைகளோடு உறங்கி உண்டு,வாழ்க்கையை தொடரும் மக்கள்!
இத்தனைக்கும் சொற்பமான வருமானம்தான் அவர்களின் அந்த நேரத்து விற்பனையில் பெறமுடியும்!
நவீன நாகரிகத்தில் பொங்கல் பானையிலிருந்து குக்கர்க்கு மாறி,பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலிட்ட மக்கள்,குக்கரின் விசில் சத்ததில் பொங்கல் கொண்டாடி, டிவிக்களில் வீழ்ந்துகிடக்கிறார்கள்!
வருடத்தின் ஒரு நாளில் நாம் ஏன் பானைகளை உபயோகித்து பயன்பெறக்கூடாது! அல்லது ஒரு ஏழைக்குடும்பம் பயன் பெற் உதவகூடாது ?
சிந்திப்போம்!
பானையில் வைத்து, பொங்கலை சுவைத்திருப்போம்!
வரும் தமிழர் திருநாளில்...!
2010ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...!