கோபம்...!


சடக்கென்று வந்து செல்லும் ஒரு விஷயம் சென்ற பின்புதான் தெரியும் அதன் வடுவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளின் விபரங்களும்! நமக்கு பிடிக்காத ஒன்றினை மற்றவர் செய்யும் போதுதான் பெரும்பாலும் கோபம் வெளிப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் கோபம் அடைந்து அதை வெளிக்காட்டிய பின்னர் சில மணி நேரங்கள் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ கூட தமது கோபம் நினைத்து வருந்துதல் அல்லது தவறு என கண்டறிகிறார்களாம் இன்னும் சிலர் தம்மை நினைத்துப்பார்த்து கேலியாக சிரித்துக்கொள்கிறார்களாம்! இதைத்தான் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று நம் பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ....!?

பிடிக்காத வேலையில் மற்றவர்கள் ஈடுபடுதல், பிடிக்காத வேலையில் ஈடுபட்டல் இவைகளால் தான் ஆத்திரம் அல்லது கோபம் குபுக்கென்று வந்து வார்த்தைகளாய் விழுகிறது சில சமயங்களில் அடிதடிகளாய் கூட அரங்கேறுகிறது.

கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!

நம்ம ஊரு ஸ்டைல் கோபங்கள் எல்லாம், பாத்திரங்களை வீசுதல் - பூரிகட்டைகளை பற்றி தெரியாதவர்களா இருக்கிறார்கள் நம் வலைப்பதிவுலகில்:-)

நாற்காலிகளை உடைத்தல்,சுவரில் முட்டிக்கொள்ளுதல் - இதிலும் சிலர் ரொம்ப ஜாக்கிரதையாக தலையாணை வைத்துக்கொண்டு முட்டுபவர்களும் உண்டு! இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதையும் தவிர்த்து அதிக பட்ச கோபங்கள் ஆபத்தான முறையிலும் கூட வெளிப்படுத்தப்படுகிறது!

எனக்கு ரொம்ப கோபம் வரும் ஆனால், வெளியில காட்டிக்கவே மாட்டேன் என்று பெருமைக்கொள்ளும் மக்களுக்கு மரியாதையாக கோபத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்...! உங்களுக்குத்தான் நிறைய நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதாம்!

சரி கோபத்தை எப்படி நிப்பாட்டறதுன்ன்னு கேட்டா?

கோபத்தை நிப்பாட்டுவது என்பது உடனே சாத்தியமில்லாத விசயம், அதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை முதலில் மேற்கொள்ளுங்கள் ! பிறகு மெல்ல குறைந்து, பின் உங்களிடமிருந்து விட்டு விலகும்!

கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்களும் தொடர்ந்தால், அந்த இடத்தினை விட்டு உடனே அகன்றிடவேண்டும்! என்று சிலர் அறிஞர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்!

ரொம்ப பெஸ்ட்டுன்னு சொல்லணும்னா 1,2,3,4,5,6,7,8,9,10....... தானாம்! இதுதான் நல்ல வொர்க் -அவுட் ஆகி கோபத்தை அவுட் செய்கிறதாம்!

அப்படியும் கோபம் இருந்தால் நன்றாக மூச்சினை உள்ளிழுத்து வெளி விடுங்கள் சில நிமிடங்களுக்கு.....!

இன்னும் கொஞ்சம் கோபம் இருந்தால் எதாவது பாட்டு கேளுங்கள் அல்லது பக்தி மார்க்கத்திற்கு சென்றுவிடுங்கள்!

இல்லப்பா இன்னும் கூட எனக்கு கோபம் இருக்குப்பா என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!

போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!

எல்லாமே க்ளியர் ஆகிடும்! (பின்ன என்னங்க இதுக்கும் மேலேயுமா ஒரு மனுசனுக்கு கோபம் இருக்கும்!)

ஏலேலங்கடி - 14



அந்த ரணகளத்துலேயும் கூட உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது!



செய்தி:-
The swine flu epidemic entered a dangerous new phase Monday as the death toll climbed in Mexico and the number of suspected cases there and in the United States nearly doubled.

டலைவர் டலைவர்தான்...!



இனிய தலைவனே!
நீ
இன விடுதலைக்காக…
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்;
அண்ணாவின் நாமத்தை-உன்
உண்ணாவில் ஏற்றவன்!
அதனால் தான்
அய்யா!நீ…
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்..அந்த
மன்னனுக்குப்பின்
மன்னனானாய்!
உன்னைப் பற்றி..நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்…
நீ
தாடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா..
அவ்விருவரும் உன் வடிவில்
இருக்கின்றார் ஒன்ணா!


- கவிஞர் வாலி



டிஸ்கி:- லேபிளிலும் கூட....

IDP - இடுங்கி கிடக்கும் எம் தமிழினம் :(

சாட்டிலைட் இமேஜ்களில் செத்துக்கொண்டிருக்கும் மக்களினை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள் சபை

எந்த நோக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ....??

ஒட்டுமொத்தமாய் அழிந்து போகட்டும் ஒரு இனம் என்ற ஆர்வத்தினூடாகவா....!

கிட்டதட்ட இரு மாதங்களுக்கு முந்தைய நிலைமையில் இப்படி என்றால் இப்பொழுது அதிவேகத்துடன் தன் வெறித்தனத்தினை காட்டிவரும் அரசின் செயல்பாடுகளில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது வெளி உலகுக்கு தெரியகூடாத வகையினில் பத்திரிக்கையாளர்களினை தடுத்துவரும் நிலையில் இப்படியான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது.

சாட்டிலைட் இமேஜ்கள் பெறப்பட்ட தளம் - இங்கே






அம்ருதா - கானா பிரபா !


அண்மைய காலங்களில் இவரின் நடவடிக்கைகளில் தெரிந்த சிற்சில மாற்றங்கள்!

கவிதை பேசிய ஸ்டேட்டசுகள்!

திடீர் திடீரென்று காணாமல் போன தருணங்கள்!

கொஞ்சமாய் யோசிக்க வைத்திருந்தாலும்,கேட்க கூச்சப்பட்டு கேள்விகளை முடக்கிப்போட்டு வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த எனக்கு உண்மை புலப்பட்டது!

வண்ணப்படங்களில் பார்க்கையில் ஆச்சர்யமே மேலிட்டது..!


ஆஸ்கார் விருது நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய தொடர்பில் ஒரு கட்டுரை ரகுமானால் பிரபலமான பாடக பாடகியர் பற்றிய விசயங்கள் என முழுமையான,மிக நேர்த்தியாக சேகரிக்கப்பட்ட தகவல்களோடு அமைந்த கட்டுரை.

அச்சு ஊடகங்கள் வழிப்பயணத்தினை அ(ம்ருதா)வில் ஆரம்பித்திருக்கும் கானா பிரபா மேலும் பல இசைத்துறை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நல்ல கட்டுரைகளை தமிழுலகத்திற்கு வழங்க வேண்டும். 

இசைத்துறை தொடர்பான பிரத்யோக விசயங்களை தமிழ் அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் மிககுறைவான எண்ணிக்கையே,கானாவின் இசைத்துறை ஈடுபாட்டில் மேலும் பல இசைத்துறை தொடர்பான கட்டுரை செய்திகளை எதிர்ப்பார்த்து,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.










2 கானாவுக்கு :- எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?


அப்டேட் பண்ணுங்க பாஸ்...! :-)

2009 ஏப்ரல் - PITக்கு

கையில் கேமரா வந்து சரியாக இரு மாதத்தினை கடந்துவிட்டது.இன்னும் கடக்க வேண்டிய கற்க வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது என்பதனையே தின நடவடிக்கைகளில் தெளிவாக்குகிறது.

சாதாரணமாய் நினைத்து இருந்த கேமரா பற்றிய சங்கதிகள் இப்பொழுது வாய் பிளக்க வைக்கும் அளவு விசயங்களோடு,கொஞ்சமும் என்னோட சிறு மூளைக்குள் சரியாய் சிக்காமல் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்த வருட விடுமுறையே கா.மு & கா.பிக்காவே நினைத்துக்கொண்டேன்.காமிரா கையில் வருவதற்கு முன்பு கிட்டதட்ட 10 நாட்கள் எங்கு செல்வதற்குமே கடும் யோசனையாகவே இருந்தது. போனா நல்ல நல்ல போட்டோஸ் எடுக்கமுடியாம போயிடுமே இப்பன்னு! (கான்ஃபிடண்ட் ! கான்ஃபிடண்ட்!!)

காமிரா கையில் வந்த பின் கையில் கேமராவை எடுத்துக்கொண்டு தெருவில் வந்து நின்றாலே பார்ப்பவர்கள் - ரொம்ப ஓவரத்தான் சீன் போடுறான்ன்னு கேக்காத குறையாக பார்த்த பார்வையில் காமிரா பார்வை கெட்டு ஒழிந்தே போனது.

ஆனாலும் அவ்வப்போது மனத்தை தைரியப்படுத்திக்கொண்டு எடுத்த போட்டோக்கள் இப்ப பிட்டுக்கு நல்லாவே உதவியா இருக்கு!

சரி எதாச்சும் ஒரு போட்டோ செலக்ட் பண்ணி சொல்லுங்கப்பா!

நானும் ஆட்டத்துல சேர்ந்துக்கணும்ல!

1

2

3

4


5



6


பயப்படாமல் (என்னிய பார்த்துதாங்க!) அழாமல், அழகாய் போஸ் கொடுத்த குட்டீஸ்களுக்கு நன்றி!

PIT பிரபலங்களே - சினிமாக்காரங்க கூப்பிடறாங்க!



நன்றி:- தினமணி

மனப்பூக்கள் மலரட்டும் - 3

தினந்தோறும் கடந்து போகின்ற செயல்கள் ஏராளம் ஒவ்வொருவருக்குள்ளும்! ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும்...!

இத்தினப்படி வாழ்க்கையில் எத்தனை விதமான செயல்கள் நம் கட்டுப்பாட்டில் நடக்கின்றன.எத்தனையோ செயல்கள் நம்மை மீறியும் - நம் கட்டுப்பாட்டில் அல்லாமலும் - நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

நாம் செய்யும் செயல்கள் நமக்கு இன்பங்களோ துன்பங்களோ அல்லது பிறருக்கு இன்பங்களோ துன்பங்களோ கண்டிப்பாக விளைவித்துக்கொண்டேதான் இருக்கின்றன.



தொடங்கும் ஒவ்வொரு நாளும் தொடங்கும் செயல்களை முடிக்கின்ற காலத்தில், அதை முடிக்க நினைக்கின்ற மனங்கள் மிகக்குறைவே! சந்தர்ப்பங்களை நீட்டிக்கொண்டோ, அல்லது வாய்ப்புக்களினை பிறருக்கு அளித்தோ அத்தருணத்தினை தப்பிக்கவே பயன்படுத்த விரும்புகிறோம்!

தப்பித்தல் அந்தந்த காலகட்டத்திற்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்க கூடியாதாகவே இருக்கும் ஆனால் அதுதான் துயரினை அதிகரித்துக்கொள்ள நாமாகவே கொடுக்கும் வாய்ப்பு என்பது கொஞ்சம் காலம் கழித்துத்தான் புரிய வரும்!

செய்யும் செயல்கள் அனைத்திற்குமே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியினை குறித்துக்கொண்டு,அதை செய்து முடிப்பதிலேயே ஆர்வத்தினை அதிகரித்துக்கொள்ளுங்கள்!

சந்தனமுல்லை!

புன்னகை புயலே;

பப்புவின் பாச மழையே;

எங்கள் மனதில் நிறைந்தாய்!

மழலைலைகளின் ஃபாலோயர் நீ...!

அம்மாக்களின் வலைப்பூ நீ...!

புன்னகையின் ஜிடாக்கர் நீ...!

அதிரடியான ஆர்கெட்டரும் நீ...!

முகிலுக்கு டெரரரும் நீ...!

உன்னால் சித்திரக்கூடத்தில் பதிவு பூக்கள் பூத்தது

தமிழ்மணம் மழலைகளின் கூட்டத்தால் நிரம்பியது!

ஆர்கெட் பப்பு படங்களால் மலர்ந்தது!

ஜி டாக் உன் சிரிப்புக்களால் நிறைந்தது!

இன்று உன் பிறந்த நாளில் இல்லம் கேக்குகளால் நிறைந்தது

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை @ ஆச்சி @ பாஸ் @ முல்ஸ் @ சந்தனம் :-)





டிஸ்கி சாங் :-

எல்லாம் கேக்கும் ஒருவள் ஒருவளுக்கே
நீ ஃபுல் கட்டு கட்டிக்கொண்டிரு
எந்த கேக்கிலும் ஸ்வீட்கள் நிறைந்திருக்குமே
உம்மை சந்தோஷத்தில் சிரிக்கவைக்குமே....!)

முறுக்கு!


பாட்டிக்கு தெரிந்த அளவிற்கான சமையல் வித்தைகள் அம்மாவிற்கு கொஞ்சம் கஷ்டமானது அதுவும், முறுக்கு சுடுவதில் முதலில் சாதாரணமான விசயமாக தோன்றும் அனைத்துமே கடினமான வேலைகள்தான்.

மாவு பதமாய் தயாரிப்பதிலிருந்து, மொறுமொறுவென்று இருக்க கொஞ்சம் மாவில் நெய் அல்லது வெண்ணை சேர்ப்பது,மாவு பட்டதும் எண்ணெய் வெடிக்காமல் இருக்க,கொஞ்சம் புளி போடுவது போன்ற எந்த சின்ன விசயங்களுமே கூட தன் மகள் செய்ய கூடாது என்று தன் வாழ்நாளினை எங்களுடனே கழித்த பாட்டிக்கு ஒரு தெளிவான எண்ணம். - பெற்றவர்கள் என்றைக்குமே தன் மக்கள் கஷ்டம் அடையக்கூடாது என்ற சிந்தனையில்தானே இருக்கிறார்கள்.

தீபாவளி வருவது என்ற சேதி கேட்ட நாள் தொடங்கி நாள் எண்ணி சரியாக 10 நாட்களுக்கு முன்பே மாவு அரைத்து ஒரு வாரம் முன்பே வீட்டில் முறுக்கு தினப்படி தீனியாகிவிடும். நினைத்து நினைத்து முறுக்கு சுட்டு பெரிய பெரிய சில்வர் வாளிகள் அடுக்குவதை பாட்டிக்கு பொழுபோக்கானது அந்த காலம்.

பாட்டிக்கு பிறகு தனித்துத்தான் விடப்பட்டிருந்தார் அம்மா. பெற்ற மக்கள் திசைக்கொன்றாய் சென்று விட தனக்கென செய்து கொண்டு வாழ அத்தனை விருப்பமில்லா வாழ்க்கை - எல்லா பெற்றோர்களுமே இந்த காலகட்டத்தினை கடந்திருக்க கூடும் அல்லது அடைந்திருக்ககூடும்!

அவ்வப்போது சென்று வரும் அண்ணன் அக்காவின் விசிட்டில் கொஞ்சம் கலகலப்பாகும் வீடு வருடத்திற்கொரு முறையாகிப்போனது எனது விடுமுறை விசிட்டில் கொஞ்சம் அதிக ஆர்வத்தையும் அம்மாவுக்கு கொண்டு வரும். தனக்கே தெரிந்த முறையில் சமையல் செய்து போடுவது தினசரி வேலையாகிப்போக,அவ்வப்போது விருப்பமாய் சொல்வதையும் சிரமம் பாராமல் செய்து முடித்து சாதித்ததில் நான் நன்றாக தின்றபோது மனம் நிறையும்.

அதுவும் இந்த விடுமுறையில் போகும்போதே ஒரு சின்ன்ன லிஸ்ட் (நம்புங்கப்பா சின்ன லிஸ்ட்தான் அது..!) கொண்டு போய் முன்பே சொல்லிவிட்டதால் லிஸ்ட் சரிபார்க்கவேண்டிய சிரமமின்றி தினமும் காலை உணவு வயிற்றையும் நிரம்பி கொஞ்சம் வெயிட்டையும் கூட்டியது உண்மைதான்.

என்னடா செஞ்சு தரட்டும்...? என்ற அம்மாவின் குரல் கேட்டு அதிகம் சிரமமேற்படுத்த கூடாது என்ற எண்ணத்தோடு “அதெல்லாம் வேணாம்மா எல்லாம் அங்க கிடைக்குது வேற என்ன வாங்கிட்டா போச்சு...! என்றவன் பதிலை, ஏற்றுகொண்ட பாணியோடு முறுக்கு செஞ்சு தரேன் எடுத்துட்டு போன்னு சொல்லிய அம்மா அன்றைக்கே அதற்கான பணிகளை ஆரம்பித்து,மின்சார கட் ஆகும் நேரம் கணித்து முன்பே சென்று மாவு மிஷினில் அரைத்த மாவோடு அரங்கேறியது முறுக்கு சுடும் படலம்!

நான் எதிர்ப்பார்த்ததை போலவே எண்ணெய் வெடிக்கும் சத்தமும்,அதை தொடர்ந்து அம்மாவின் குரலும், ”ச்சே...! எப்ப நான் முறுக்கு சுட போனாலும் இது ஒரு தொல்லை! எனக்கு என் அம்மா ஒழுங்க சொல்லிக்கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்ற அலுப்போடு,எதிர்வீட்டு டீச்சரின் ஆலோசனையும் கை கொடுக்க, நானும், கொஞ்சமாய் சுட்டு கொடும்மா..! என்ற ஆதரவு குரலில் ஒரு வழியாய் பார்சல் செய்ய ரெடியானது முறுக்கும் அதனோடு கூடவே, ஓலை பக்கோடா!





@ தோஹா

பார்சல்கள் பிரிக்கப்படாமல் 4 நாட்கள் கழிந்த போதுதான் முறுக்கு மெல்ல ஞாபகப்படுத்தியது! அதே சமயத்தில் இன்னொரு மனம் வேண்டாம் இப்ப சாப்பிட்டா தீந்துடும்! என்று நாவினை கட்டுப்படுத்த,காமிராவில் மட்டும் தின்று ரசித்தேன்.

வந்திருக்கும் கொஞ்சம் முறுக்கில் கொஞ்சூண்டு மட்டும் இதுவரை காலியாகியிருக்கிறது!

இன்னும் காலம் இருக்கிறது...!